அலசல், புத்தகம், விமர்சனம்.

Sunday 12 April 2015

மீண்டும் வருவேன் மீண்டு வருவேன்

 
ஒருசிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் தொடர்கிறது என் எழுத்துகளும், கருத்துகளும் ....
 
சமிபகாலமாக வெற்றி கூட்டணி என்றபேரில் மீண்டும் மீண்டும் வந்த வாசமே வந்து வந்து போகிறது, இதில் சில திரை படங்கள்  வெற்றியடைந்தாலும், இரண்டு படங்களின் கட்சிகளும் ஒப்பிடும் வகையில்தான் உள்ளன. இதற்கு புதிதாக ஒரு பெயர் சூட்டும் கரணம் தான் தெரியவில்லை.
 
அதே கூட்டணி, அதே கதை களத்தில் படங்கள் எடுப்பதில் தவறில்லை; ஆனால் ஹாலியுட் படங்களை போல் பாகங்களாக தயாரிக்கலாம். புதிய பெயரில் மக்களை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவதை விட - இது தான் கதை என்று மக்கள் ஏற்றுகொள்வார்கள்.
 
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களின் வேற்றுமையை கண்டறிக என போட்டியே வைக்கலாம் .
 
மனம் கொத்தி பறவை மாறுபடியும் வெள்ளைகாரதுரை 
 
பருத்திவீரன் சில வருடங்களுக்கு பின் கொம்பன், ஆனாலும்  படம் பார்க்கும் விதமாகவே இருந்தது.
 
சில இயக்குனர்கள்  தமிழில் கூட ஹலியுட்  முறையை பின்பற்றுகிறார்கள்; உதாரணமாக- சிங்கம் 2,காஞ்சனா 2...
 
முந்தய விஜயின்   படங்கள்  ஒரே கதையமைப்பில் இருப்பது சாதாரணம் அது சற்று மாறிவருகிறது.

விஜயகாந்த், சரத் குமார் , கார்த்திக் , ஆர்ஜுன் போன்ற ரிட்டாடு ஆனா நடிகர்களின் மத்தியில் இடைக்கால நடிகர்கள் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். அந்தபட்டியல் நாளுக்கு நாள் அதிகமாக காரணம் புது முகங்களின் அறிமுகம்,  அதே சமயம் ஷாம் , பிரசாந்த் , விக்ராந்த் , ரவி கிருஸ்ன , ரமேஸ் , சிபிராஜ் போன்ற பின்பலம் உள்ள நடிகர்களின் "கம் பேக் " முயற்சிகளும் தொடர்கிறது.

அதைபோல் சினிமாவில்  தன்துறைவிட்டு தாவி தானும் ஹீரோ என  திரைக்குமுன் வந்து  தத்தளிப்பவர்களும் ஏராளம் அவர்களின் பட்டியல்  வடிவேல் ,விவேக் , சேரன் , s .j சூரியா, என  நீளுகிறது.

என்ன வேண்டுமானாலும்  நடக்கலாம் அதுதான் சினிமா .....
                                                                                                                               தொடரும்...
 

No comments:

Post a Comment