அலசல், புத்தகம், விமர்சனம்.

Saturday 22 June 2013

கொள்ளையர்களின் சங்கிலி




   வியாபாரம் என்பது ஏமாற்றுவதுதான்; வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதுதான்  வியாபாரிகளுக்கு இலாபம் தரும், ஆனால் ஏமாற்றுவதை வியாபாரமாக்கி அடித்தட்டு மக்களை ஆசை காட்டி மேஷம் செய்யும் தந்திரமே கொள்ளையர்களின்  சங்கிலி.


  இந்த சங்கிலிதொடர் கொள்ளையில் இணைக்கபடுவது நம்முடைய நண்பர்களின் மூலமே. பல வருடங்களுக்கு முன் வகுக்கப்பட்ட இந்த திட்டம். காலத்திற்கு ஏற்றபடி பல பரிமாணங்களை எடுத்து வருகிறது.எந்த பரிமாணமாக இருந்தாலும் ஒரே இலக்கைத்தான் முன்வைக்கும்  "குறிகிய காலத்தில் கோடிஸ்வரன் ".

  பத்து வருடங்களுக்கு முன் முதல்முறையாக என்னை சந்தித்த இந்த சங்கிலி அதன்பின் பல பரிமாணங்களாக என்னை சந்தித்துவருகிறது. இதில் எமாறுபவபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. நான் பார்த்த இந்த கொள்ளை சங்கிலியின் சில பரிமாணங்களை இங்கு பகிர்கிறேன்.

1997
உறுப்பினராக  2,000 k 

வீட்டு உபயோக பொருள்களின் பரிமாணத்தில் இந்த கொள்ளை சங்கிலியை முதலில் சந்தித்தேன் .

  2000 ரூபாய் கொடுத்து சங்கிலியில் இருக்கும் ஒருவரின் கீழ்   உறுப்பினர் ஆக வேண்டும். அவர் நமக்கு இரண்டு  வீட்டு உபயோக பொருள் விற்பதற்க்காக  கொடுப்பார். அதை விற்கவேண்டும். வாங்கும் நபரை மூளை சலவை செய்து நமக்கு கீழ்  இரண்டு நபர்களாக சேர்க்க வேண்டும். அப்போது நாம் முதலில் கொடுத்த 2000 ரூபாயில் பாதி அதாவது 1000 நமக்கு கிடைத்துவிடும். அவர்களும் இதைபோல் செய்யும் போது நமக்கு கீழ் 6 நபர்கள் வருவார்கள் .

  இங்கு முதல் காட்ட படுவது மட்டுமே வியாபாரம் அதன் பின் மற்றவர்களை மூளை சலவை செய்து எப்படி  நமக்கு கீழ் இணைப்பது,  நாம் எப்படி பணம் சேர்ப்பது என்ற களவுபடம்தான்.


மூளை சலவை செய்வதற்காக  கையாளப்படும் விதிகள்:

1.மிகுந்த மரியாதையுடன் அழைப்பது.
(சார் ,ஜி ,.....)

2.ஆடையில் ஒரு உயர்தர மாயையை ஏற்ப்படுத்துவது .
(டை அணிவது, சூ அணிவது ,...)

3.தான் வேகமாக வளர்வதாக பொலி ஆவணம் கட்டுவது.
(பேங்க் இருப்புத்தொகை, விலையுயர்ந்த பொருள்களின் உரிமை,...)

4.இடைவிடாமல் புன்கையுடன் பேசுவது.

5.சிந்திக்கவிடாமல் காய் நகர்த்துவது.
(போசும் போது அவர்களின் சிந்தனைகளை உகிப்பது )

6.பணத்தாசை உக்குவிப்பது.
(அடுத்தவர்களுடன்  ஒப்பிட்டுவது  )

கொள்ளை சங்கிலியின் சூத்திரம்:   50%

                                                                  A   +2000+4000+4k 

                               B - 2000 +2000+ 2k                                         C     -2000+2000+2k 


       1b -2000+1k                       2b -2000+1k                   1c-2000+1k                      2c -2000+1k 


1ba -2k          1bb  -2k          2ba -2k        2bb-2k         1ca-2k         1cb -2k       2ca-2k        2cb-2k


1ba  to A +500  ;(1ba+1bb+2ba+2bb+1ca+1cb+2ca+2cb) =4k
1ba to  B +500  ;(ba+1bb+2ba+2bb)= 2k
1ba to  1b+500 ;(ba+1bb)=1k                             
                                                                                                                     to be continued.....

சூத்திரம் ஒன்றுதான் காலத்திற்கேற்ப ஆரம்ப பரிமானம்தான் மாறுபடுகிறது.

2000   
ஆன்லைன் கொள்முதல்
உறுப்பினராக  4,000 k 

2005
பெண்களின் அலங்கார பொருள்கள் (லிப் ஸ்டிக்,... )
உறுப்பினராக  5,000 k  

2007
கல்வி புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் கல்வி 
உறுப்பினராக  6,000 k

2010
ஹெல்த் போர்டின் பவுடர்ஸ் 
உறுப்பினராக  8,000 k  

2012
பிஸ்னஸ்மேன்
உறுப்பினராக   10,000 k 

 பாதிக்க பட்டவர்கள் ஏராளம் ......