அலசல், புத்தகம், விமர்சனம்.

Monday 14 January 2013

உயிர்தேடும் உலகிலே...

   ""கற்றது கையளவு கல்லாதது உலகளவு"" 

  ஒவ்வொருநாளும் புதுவித அனுபவங்களுடன் நான் அறிந்து வரும் விஷயங்களையும் ஆச்சரியம் தரும் விஷயங்களையும் கிறுக்கவேண்டும் என்ற ஆவலில் இந்த பதிவை ஒரு தொடராக எழுத நினைக்கிறேன் இதில் வரும் செய்திகள் நீங்கள் அறிந்தவை ஆகலாம், மொக்கைகள் ஆகலாம், உண்மைக்கு புறம்பாகலம் எதுவானாலும்  என்னுடைய பார்வைகளில்  பட்ட  கண்டேப்புகளே, உலகில் வாழும்  ஒவ்வொரு உயிரும் எதையோ தொடுகிறது. அவ்வாறு உயிர்கள் தேடும் உலகில் என் தேடல் ...


பொருளடக்கம் :
1.அறிவின்  தேடல்
2.அறிவியலின் தேடல்
3.பொருள் தேடல்
4.இறை  தேடல்
5.இன்பமுறுதல்
6.அமைதியை தேடி
7.மரணம் தேடல்
8.என் தேடல்





முன்னுரை :
  மனிதன் மரணத்திற்கு பயப்படுகிறான் மரணத்திலிருந்து விடுபடநினைத்து
ஓடுகிறான். இந்த உலக வாழ்க்கை நிலையானது இல்லை என்ற எண்ணம் அவனிடன் இருப்பதில்லை. மரணத்தை கண்டு அன்சாதவனே உலகில் பல சாகசங்களை செய்து முடிக்கும் வெற்றி வீரனாக வலம் வருகிறான் .உலகில் பல சாதனை மனிதர்கள் வாழ்த நாள் கொஞ்சம்தான் ஆனால் அவர்கள் வாழும் நாளே அதிகம்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினனமும் பிறந்த நாள் முதல் உயிர்வாழும் ஒவ்வொருநோடியும் உயிர்வாழ்வதரற்க்காக போராடிக்கொண்டு இருக்கிறது .
நிலையில்லாத உலகத்தில் பொருள் சேர்த்து  வைக்கின்றது. நோய்களும் விபத்துகளும் உயிர் நிலையானது இல்லை என்ற உண்மையை உணர்த்திவருகின்றன .

மனிதனின் தேடல் அடுத்த உயிரகளை மதிக்காமல் தான்,  தன், என்ற வட்டத்திற்குள்ளே தொடர்கிறது.உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்க்கான உரிமை உள்ளது. தான் கடந்து வந்த பாதையை பலர் நினைத்து பார்ப்பதில்லை. அதுபோலவே வயதின் இளமையில், நமக்கும் வயதாகும் என்ற எண்ணமும் பலபேரிடம் இருப்பதில்லை .

கடந்து வந்த பாதையை மறப்பவனின் வெற்றி நிலையானது அல்ல அந்த    வெற்றியை அவனால் தக்க வைத்து கொள்வதும் கடினம் .

1.அறிவின்  தேடல் :
 அறிவு, அனுபவம், ஞானம் என்பவாற்றல் மனிதன்  வெற்றிபெற போராடுகிறான் ஆனால் இந்த மூன்றின் வேறுபாட்டையும் அறியதவனே தன்னை அறிவாளி  என்பவன்.

அறிவு:   நாம் அறிந்து கொண்டவை, இதில் ஒவ்வொருவரும் ஒரு துறை சார்ந்த அறிவில் மேலோங்கி இருக்கின்றனர். புரிந்துணர்வுடன் கற்ப்பவருக்கே இது கல்வியறிவு ஆகும். இவை புத்தக அறிவுக்கு  உதாரணம்.

அனுபவம்(பயிற்ச்சி ):  ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதன்மூலம் கற்றுக்கொள்வது; சிலரது கல்வி முறை கூட இவ்வாறே உள்ளது. ஒருபுத்தகத்தை திரும்ப திரும்ப படிபதன்முலன் அதை மனதில் பதித்து கொள்கின்றனர். இது பயிற்சி கல்வியறிவு ஆகாது .உதாரணமாக  சுற்றுல தலங்களில் உள்ள  வியாபாரிகள் திரும்ப திரும்ப கேட்ப்பதன்மூலம்  பலமொழிகளில் பேசும்  பயிற்சி பெறுகிறார்கள். இதன் மூலம் பலமுறை படைதிட்டப்பட்ட வைரக்கல் பளபளக்குகிறது ...

ஞானம் :    இது தனித்தன்மையாக உள்ளது ஒவ்வேருவரிடமும் மாறுப்பட்ட (ஞானம்)தனித்தன்மை உள்ளது .இதை கண்டறிந்து அந்த துறைசார்ந்த அறிவைபெருக்கி கொண்டால் வெற்றி நிச்சயம்.
 உதாரணமாக:
 நினைவாற்றல், உடல் வலுமை, சிந்தனை திறன் ,...இது போன்றவை பரம்பரையுடன் தொடர்புடையவை .

2.அறிவியலின் தேடல் :
மனிதன் கடவுளாக முயர்ச்சிப்பதே அறிவியலின் தேடல் இங்கு மனிதன் தன்னை கடவுளாக மக்கள் இடத்தில் நிலைபடுத்த முயற்ச்சிக்கிறான்  மனிதனால் காணமுடிந்ததே கடுகளவு உலகம்தான் அதில் புதைந்திருக்கும் உண்மைகளையே அறிவியலால் தெளியுபடுத்த முடியவில்லை அதற்குள் மாபெரும் சத்தியக வளர்ந்துவிட்டதாக ஒரு பிரம்மை .

அறிவியலால் அளிக்கப்பட்ட மனித ஆற்றலையே கண்டுபிடிக்க முடியவில்லை அதற்குள் அடுத்த கிரகத்தில் குடியேறும் ஆசை....


உண்மையான தேடல் மரணம் இதை நீ அறிவைய மனித 

தேடல் தொடரும் ...