அலசல், புத்தகம், விமர்சனம்.

Saturday 24 November 2012

முகமூடி மனிதர்களின் சதுரங்க ஆட்டம்





 மனிதவாழ்வில் உண்மையான மனிதர்களை பார்ப்பது அரிதினும் அரிதாகிவிட்டது மனிதர்கள் சுயலாபத்திற்காக போலி முகமுடிகளுடனே நடமாடிக்கொண்டு  இருக்கிறார்கள். சதுரங்க ஆட்டத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் ஒரு சிறிய வித்தியாசமே உள்ளது. ஆனால் அதை அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுக்கொள்வது கடினம்.

  சதுரங்க ஆட்டத்தில் இரண்டு நிறங்களே உள்ளன. ஆனால்  மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருநிறம். மனிதர்களை அடையாளம் கண்டுக்கொள்வதும் கடினமே. போலி புன்னகையுடன் மனிதர்கள் ஆடும் சதுரங்க ஆட்டத்தில் முகமூடிக்கு உள் உள்ள உள்ளத்தில் புதைந்துள்ள வஞ்சம்,பொறமை, இவற்றை அடியாளம் காணவேண்டும். எதிரில் நிற்கும் பகைவனைவிட அருகில் இருக்கும் துரோகியே ஆபத்தானவன் . எதிரில் இருப்பதால் ஒருவன் எதிரி அல்ல ,அருகிலிருப்பதாலே ஒருவன்  நண்பனும் ஆகிவிட முடியாது.


  சதுரங்க ஆட்டத்தில் எப்படி களத்தில் உள்ள ஒவ்வொரு காய்களின் அடுத்தடுத்த நீக்கங்களை  கணிப்பத்து முக்கியனானதோ; அதைவிட முக்கியமானது, நாம் வாழும் உலகில் நாம் நகரும் பொழுதுகள். இங்கு கருப்பு வெள்ளை வித்தியாசம் தெரிவதில்லை கருப்பு மனிதர்கள் வெள்ளை முகமூடியுடனும், வெள்ளை மனம் படைத்தவர்கள் கருப்பு சாயத்துடனும் வெளியில் தோன்றலாம் .

  அன்று முதல் இன்றுவரை  பழைய வாழ்க்கையை மறந்து வாழ்வது  மனிதர்கள் இயல்பாக உள்ளது. அடுத்த நொடி தனக்குரியதில்லை. என்பதை எண்ணாமல் தனக்கு மேலிருப்பவனைக் கண்டு அழுவதும்; கீழிருப்பவனை கண்டு சிரிப்பதுமே மனிதனின் மனம். மனிதனை மனிதனாக பார்க்காமல் சாதி, வசதி, மதம், இனம், மொழி இவற்றை கொண்டு வேறுபடுத்தி பார்க்கின்றனர். காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் .

  மனிதர்களின் அக எண்ணங்களை கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். புறத்தில் கட்டும் முகமூடியை  பிரித்தறிய வேண்டும். வாழ்கையில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானதே. இங்கு சண்டியர்களை விட சாணக்கியர்களே  பலம் வாய்ந்தவர்கள் ...




No comments:

Post a Comment