அலசல், புத்தகம், விமர்சனம்.

Wednesday, 31 October 2012

கிணத்து தவளைகளின் ஹாலிவுட் மொக்கைகள்

           ஹாலிவுட் திரைப்படங்களில் விறுவிறுப்புடன் திரைக்கதை இருப்பதால் மொக்கைகள் கூட வசூலை அள்ளுகின்றன. தொடர்வரிசையில்     வரும் திரைப்படங்கள்   சிலவற்றில் நம்மஊர் தொலைக்காட்சி தொடர்கள் அளவுக்ககூட கதை இருப்பதில்லைசொல்லப்போனால் சிந்துபாத்( தினத்தந்தி) அளவுதான். அதை வைத்துக்கொண்டு அவர்கள் ஓட்டும் ஓட்டு தாங்கமுடியவில்லை.


   ஒரே படத்தை புது  தொழில்நுட்பம் வரும்போது எல்லாம் தயாரித்து காசுப்பார்க்கின்றனர். அரைத்த மாவையே அரைக்கின்றனர். குறிப்பாக (ஸ்டார்ஸ் வார்ஸ்)திரைப்படம் நம்மூரில்  தூதர்ஷ்சனில் தொடர்களாக வெளிவந்த சத்திமான் ,ஜுனியர்- ஜி, ஆரியமான்,ஹிமேன்  அளவுக்கூட கதை இருப்பதில்லை ஆனால் வசூலில் வாரி குவித்தன .


போர்ன் தொடர் திரைப்படங்கள் விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றி மகுடம் சூடியது ஆனால் கதையை பார்த்தல் இரண்டு பக்கங்கள் கூட இல்லை.

ஜேம்ஸ்பண்ட் திரைப்படங்கள் ஹாலிவுட் மொக்கைகளுக்கு சிறந்த உதாரணம் ரசியாவையே குறிவைத்து பலபாகங்கள் மொக்கை போட்டன. படபிடிப்பு தளங்கள், கேமராகோணங்கள், கவர்ச்சி இவற்றின் புதுமையால் அரைத்த மாவையே வைத்து காசுபார்க்கின்றனர்.  ஜேம்ஸ்பண்ட் தொடரில் தற்ப்போது நடித்துவரும் சில நடிகர்களுக்கு நடிக்கவேண்டும் என்பதே மறந்து விடுகிறது .


    இதில் கொடுமை என்னவென்றால் இந்த மாதிரியான திரைப்படங்களுக்கு சிலர் வக்காளத்து வாங்குகின்றனர். இவர்களில் சிலருக்கு தமிழ்திரையுலகில் வரும் சிறந்த படைப்புக்களை பற்றி பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.

  இன்னும் சிலர் தமிழில் ஹிரோயிசத்தை எதிர்த்துவிட்டு;  ஹாலிவுட் ஹிரோயிசத்திற்க்கு கைதட்டுகின்றனர்.உலக அளவில் பல நல்ல திரைப்படங்கள் வந்தாலும், ஹாலிவுடில் மொக்கைகளே அதிகம் .

   ஹரிபட்டர் தொடர்கள் இரண்டு பாகங்கள் எடுப்பதற்க்கான கதையே உள்ளது அதை வைத்துக்கொண்டு பல பாகங்கள் எடுத்து காசுப்பார்த்தனர். திகிலும், குழந்தைகளின் ஆர்வமும், பின்னனியிசையும்  துணைநின்றது . நம்மூரில் தொலைகாட்சி தொடர்களில் பின்பற்றப்படும் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கும்
ஆர்வத்துடன் ஒவ்வொரு பாகங்களையும் முடிக்கும் வித்தையே கையாளப்பட்டுள்ளது .

(லாட் ஆப் தி ரிங் பாகங்கள் தனித்துவம் வாய்ந்தவை அவை இதில் சேராது.)

  தமிழிலும் தற்போது இந்த பழக்கம் பரவ தொடங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகில் இப்போது ரீமேக் என்ற பெயரில் தமிழ்சினிமாவின்  அடையாளங்களாக விளங்கும் திரைபடக்களை ரீமேக் செய்து  மொக்கைகள் ஆக்குகின்றனர்.  இதற்க்கு உலகில் சிறந்த படங்களை தமிழில் காப்பியடிப்பதே மேல் .

  கிணத்து தவளைகள் தான் அறிந்ததே உலகம் என்ற எண்ணத்துடன் வாழ்பவை அதுபோலவே உலகில் பலமனிதர்கள் நடமாடுகின்றனர். அறிவு, அனுபவம், ஞானம் என்பவாற்றல் மனிதன்  வெற்றிபெற போராடுகிறான் ஆனால் இந்த மூன்றின் வேறுபாட்டையும் அறியதவனே தன்னை அறிவாளி  என்பவன். உலகளவில் தமிழ்சினிமா வளர்வதற்கு தமிழ் ரசிகர்கள் உலகளாவிய ரசினையுடன் தமிழ்சினிமாவை வரவேற்க்கவேண்டும் ...

பி .கு : மாதம் முடிவதால் அவசரமாக  மரண மொக்கை வெளியிட்டுள்ளேன் படித்தவர்கள் மறந்துவிடுங்கள் ... 
Tuesday, 9 October 2012

அஜித்-ஐ ரசிக்கிறேன் அஜித் ரசிகனை எதிர்க்கிறேன்

     சிலரின் செயல்பாடுகளும் வாழ்க்கையும் நம்மை பிரம்மிப்படைய வைக்கும் அந்தவகையில் அஜித் செயல்களும் பலரை வியக்க வைப்பதாகவே உள்ளது ,
மனிதன் தவறுகள் செய்பவன் ஆனால் தன்னிலை மாறாமல் தன்னம்பிக்கையுடன் தன்னடக்கத்துடனும் வாழ்பவனை தலைவனாக கொண்டு பின்தொடர்வது இயல்பு. அந்த வகையில் அஜித் தனிமனிதனின் வெற்றிக்கும், உழைப்புக்கும், உயர்விற்கும் ஒரு உதாரணமாகவே அறியப்படுகிறார் .


   இன்றைய நிலையில் ஆட்சியாளர்களுக்கு சலாம் போடும் சினிமா  மனிதர்களின் மத்தியில் தன்னிலையை உலகறிய தெளிவு படுத்தியவர்அஜித்.
 நட்சத்திரங்களின் குடும்ப வாழ்க்கை தள்ளாடும் இன்றைய சூழலிலும்  நட்சத்திர தம்பதிகளாக சிறப்பாக குடும்ப வாழ்க்கையில் வெற்றிகண்டவர் .

 அரசியல் ஆதாயத்திற்காகவும் புகழுக்காகவும் ஏழைகளுக்கு உதவும் மனிதர்களில்; உலகறியாது உதவுபவர். தன்  சினிமா  அடை மொழியையே உதறியவர். 

   இந்தயாவில் வெற்றி வீரனாக இருந்த போதும், தோல்வியில் துவண்டபோதும், கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு அடுத்ததாக நிலையான  ரசிகர்களின் ஆதரவை பெற்றிருப்பவர். தன் ரசிகர் மன்றங்கள் சில தன்னுடைய கொள்கைகளுக்கு  எதிராக செயல்படுவதாக தோன்றியதால் அதை கலைத்தவர் .

         இத்தனை   பெருமைக்குரிய   மனிதரின் ரசிகர்கள்   பலருக்கு   அவருடைய 
பிறரைமதிக்கும் பண்பும்,  மனிதாபிமானமும், வெற்றி பெறுபவர்களை பாராட்டும்   நல்குணமும் இருப்பதில்லை . அஜித்தின் தோல்வி படங்களை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவமும் சிலரிடமே உள்ளது .

 தமிழ்த்திரையுலகில் நடிகர்திலகத்திற்கு பின் நடிப்பில் முத்திரை பதித்தவர்களில் அஜித்தும்  ஒருவர் . ஆனால்    அஜித்            மட்டுமே       என்பது
ஏற்ப்புடையது அல்ல. அஜித்தின் சிட்டிசன் ,வாலி ,வரலாறு போன்ற படங்கள் அஜித்தின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின ...

         ஒரு சிறந்த      மனிதனின்    ரசிகனாக   இருந்து   கொண்டு    மற்றவர்களை
போல், அடுத்தவரின்  படைப்பையும் வெற்றியையும் தரக்குறைவாக விமர்சிப்பத்தும்; ஏற்றுக்கொள்ள மறுப்பதும்,நடிகனின் நடிப்பை பார்க்காமல்  நடிக்க வேண்டிய திரைப்படங்களில் ஆடதேரிய வில்லை என மற்றவர்கள் அஜித்தை விமர்சிப்பதுக்கு  நிகராகவே உள்ளது .இதனால் அஜித்தை ரசிக்கும் பலரால் அஜித் ரசிகர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை......