அலசல், புத்தகம், விமர்சனம்.

Sunday, 29 July 2012

2012-ல் தமிழ்த்திரைப்படங்கள்

        2012-ல்  வெளிவந்த தமிழ்த்திரைப்படங்கள் மக்கள்ப் பார்வையில்

இந்த ஆண்டு  தமிழ்த்திரையுலக முன்னனி நடிகர்களின்  படங்கள்  இதுவரை குறிப்பிடத்தக்க பெரிய வெற்றிப் பெறவில்லை...


ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த நண்பன் முதல்வெற்றியைப் பெற்றது. இந்தப்படம் 3இடியட்ஸ் படத்தின்  பதிப்பாகவே வெளிவந்தது படத்தின் கதை மற்றும் திரைக்கதை வலுவாக இருந்தப்படம் வெற்றி உறுதி செய்யப்பட்டே வெளிவந்தது.


லிங்குசாமி வேட்டை படம் மூலம் வெற்றிக்கனி பறித்தார். படத்தில் மாதவன், ஆர்யா, அமலப்பால், சமிர நடித்திருந்தனர் படம் கமர்ஷியல் வெற்றிப்பெற்றது.

3-பாடல்கள் மூலம் பரபரப்பை ஏற்ப்படுத்தியபடம்
ஆனால் மக்கள் மனதில் பதியவில்லை,
தனுஷின் முந்தைய படங்களையே நினைவுப்படுத்தியது. கிருஷ்ணாவின் நடிப்பில் வெளிவந்த கழுகு புதிய இயக்குனரின்  பரிசாக தமிழ்த்திரைக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொருக்கட்சியும் சிறப்பாக படம்பிடிக்கப்பட்டு திரைகதையையும்,கதையையும் அலங்கரித்தது படத்தில் நடித்த அனைவரும்  சிறப்பாக நடித்திருந்தனர்.
இயக்குனர்  ராஜேஷ் தனது மூன்றாவது வெற்றியை ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் பதித்தார் கதை திரைக்கதையில் எந்தமாற்றமும் செய்யாமல் தனது முந்தய இருபடங்களை போலவே எடுத்திருந்தாலும் ரசிக்கும் படியாக இருந்தது. இந்த படத்தின்மூலம் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகன் ஆனார். ஹரிஸ்  பாடல்களும் படத்திற்கு உதவின.மனம் கொத்தி பறவை இளமை காதலை இனிமையாக சொன்னப்படம். படம் நகைசுவையுடனும் இனிமையான பாடல்களுடனும் வெற்றிக்கண்டது.

கார்த்தி ஹிரோயிசத்தல் சகுனி படம் மூலம் முதல் தோல்வி கண்டார். 

நான்  ஈ மிகுந்த எதிர்பார்புகளுடன் வந்த படம் அதையும் தாண்டி வெற்றிமகுடம் சூடியது. இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் ஹாட்ரிக் வெற்றி வசப்படுத்தினர் ராஜமௌலி. படத்தில் கிராபிக்ஸ் சரியாக பயன்படுத்தப்பட்டது.


பில்லா 2 பின்னனியிசை மற்றும் திரைக்கதையால் பெரிய வெற்றியை இழந்தது.

அம்புலி,காதலில் சொதப்புவது எப்படி,அரவான்,வழக்கு எண் 18/9,மெரினா  
ஆகிய படங்களும் மக்களால் பாராட்டப்பட்டன...

ஆண்டின் இரண்டாம் பருவத்தில் எதிர்ப்பார்ப்புடன் வந்த பெரிய நடிகர்களின் படங்களும் வரிசையாக தோல்வியடைந்த (முகமூடி,தாண்டவம்,மாற்றான் )

சுந்தரபாண்டியன்,பிட்சா படங்கள் ஓரளவு வெற்றியை தந்தது. குறிப்பாக  பிட்சா பாரட்ட பட வேண்டும் .

தூக்கி விட வந்த துப்பாக்கி துணையாகவே அமைந்தது , முருகதாஸ் இயக்கத்தால் படம் தோல்வியிலிருந்து தப்பித்தது , பாடல்கள் விஜய் படங்களில் வெற்றி அடைவது வாடிக்கை அது பிழைக்கவில்லை ,படத்தில் இராணுவம் பெருமை படுகிறது.


 நீ தானே என் பொன்வசந்தம் பாடல்கள் எதிர்பர்க்கபட்டு எதிர்பார்ப்பு பூர்த்தி அடையாததால்;  படம் தோல்வி அடைந்தது எதிர்பார்த்ததே...

நீர்பரவை, கும்கி, நடுவில கொஞ்சம் பக்கத்த காணேம் படங்கள் மக்களால் பேசப்படுகின்றன.

மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு இனிக்கவில்லை ...

                                                                         

Thursday, 26 July 2012

சாத்தான் வேதம் ஓதுகிறான்...


கத்தோலிக்கத்திருச்சபை


                        சாத்தான் வேதம் ஓதுகிறான்           

                                                             அன்பு Vs ஆசை                                                      

 நூலடக்கம் 
   *முதலுரை   

 1.   இறைவனும் மனிதனும் 
 2.   கத்தோலிக்க விசுவாசம்
 3.   இறைவனின்  கட்டளை
 4.   தீமைகளின்  தாக்கம் 
 5.   இறைவனின்  வார்த்தை
 6.   இயேசுவின்   வாழ்வு
 7.   திருப்பலியும்  நற்கருனையும்
 8.   மரபுகளும்  அடையளங்களும்
 9.   இறைவனின்  கோபம்
 10. குழப்பங்களிலிருந்து  தெளிவுப்பெறுவோம் 
   *நன்றியுரை 


*முதலுரை:
    ஒரு  நாணயத்திற்கு  இரண்டு  பக்கங்கள்  இருப்பதுபோல்  மனிதனின்  மனதும்  இரண்டு  பக்கங்களாகவே  செயல்படுகிறது. அன்பு  வழியிலும் , ஆசைக்கு  அடிமையாகியும் மனிதன் வாழ்கிறான்; ஆசைக்கு அடிமையாகி  பாவச்செயல்கள்  செய்வதைவிட்டு விட்டுஅன்புவழியை  பின்பற்றி  இறைவனடிசேரவே  ஜெபங்கள்   தேவைப்படுகின்றன.

    மனம்  தூய்மையானவர்களுக்கு  ஜெபங்கள்   தேவையில்லை; ஆனால்  மனிதரில் எவரது  மனமும்  தூய்மை  இல்லை  எனவே  மனிதன்  பாவங்களில்  இருந்து  விடுதலைப்பெறுவதற்கு ஜெபிக்கிறான், இறைவனை விசுவாசித்து சாத்தானின் பிடியிலிருந்து  விடுப்பட்டு,  ஆசையை  துறந்து  மனிதரிடம்  அன்புக்கொண்டு மனிதன் புனிதனாக மறவே இறைவன்  விரும்புகிறார், இதற்க்கே ஜெபங்கள்  உதவுகின்றன, கத்தோலிக்க  திருச்சபை   மனிதர்கள்  பாவங்களை  களையவும் அன்புக்கொண்டு  வாழவும்  விரும்பி , வகுக்கப்பட்ட  மரபுகளையும் அடையாளங்களையும்  பின்பற்றி  கூட்டு ஜெபவழிபாடு  திருச்சபையில் நடைப்பெறுகிறது. ஆனால் சிலர்  கத்தோலிக்க திருச்சபையை  விட சிறந்ததாக மாயை  கொண்டு,  திருசபையின் வழிபாடுகளை   முழுமையாக  அறிதுக்கொள்ளாமல் வாழ்கின்றனர். உண்மையில்    கத்தோலிக்க   திருச்சபையில்   ஓதும்  வேதம்  தான்  என்ன?
பின்பற்றும்  மரபுகள்  தான்  ஏது ?

10.குழப்பங்களிலிருந்து  தெளிவுப்பெறுவோம் 
 * மனிதன்  குரங்கிலிருந்து  வந்தவன்   என்கிறதே  அறிவியல் ?
               மனிதன்  குரங்கிலிருத்து   வந்தவனானால்   இப்போதுள்ள   குரங்குகள்  மனிதன்  ஆவது   எப்போது ...* தந்தை,மகன்,தூயாவி,இயேசு இவர்களில்  யார் கடவுள் ?
            கடவுள் ஒருவரே ;அவரை ஓவ்வொருவரும்  அழைக்கும் விதம் மாறலாம் கடவுளின் மனித  உருவமே இயேசு. மனிதர்கள்  பலரால்  பலவிதமாக  அழைக்கபடுவது  இல்லையா ....*விசுவாசம் என்றால் என்ன?
             விசுவாசம் என்பது நம்பிக்கை; கண்களால்  காணதப்போது வார்த்தையின் மீது நம்பிக்கை  கொண்டு அதை ஏற்றுக்கொண்டு அதை  பின்பற்றுவது. கண்களால் கண்ட ஒன்றினை நம்புவது விசுவாசம் ஆகாது ... * இறைவன் ஏன் தன் வல்லமையால் மக்கள் தீமையின் பக்கம் செல்வதை தடுக்கவில்லை ?
         இறைவன் மக்கள் சுகந்திரமாக வாழ்வதையே  விரும்புகிறார், அதற்காகவே நன்மையையும், தீமையையும் பகுத்தறியும் ஞானத்தை வழங்குகிறார்; இறைவன் ஆட்டிவைக்கும் பொம்மைகளாக  மனிதனிருப்பதை  இறைவன் விரும்புவதில்லை, காரணம்  இறைவனுக்கு  மனிதன்  மேல்  உள்ள   அன்பு ... 
 
  *சாத்தான் என்பது யாது ?
            உலகில் அன்பை அழிக்கும் ஒவ்வொரு விசயங்களும் சாத்தான்; இவை மனிதனை ஆசைக்கு அடிமையாக்கி தீமை செய்ய துண்டுகிறது;
மனிதனுக்கும் இறைவனுக்கும் இருக்கும் அன்பை பிளவுப்படுத்துகிறது ... * பரலோகம்-நரகம் என்றால் என்ன ? 
            பரலோகம் என்பது-இந்த பரந்த உலகத்தில்  நிம்மதியுடனும் அன்புடனும் மனிதன்வாழும் இடம் நரகம் என்பது-மனிதன்  ஆசைக்கு அடிமையாகி  
மாயயுலகில்  நிம்மதியின்றி வாழும்  இடம் இங்கு துன்பம் நிறைத்திருக்கும் ..  * இறைவனடிச்சேர இறைவிசுவாசம்  இருந்தால் போதுமா ?
              இறைவனடிச்சேர தேவைப்படுவது இறைவன்  எதிர்பார்க்கும் அன்பு. இறைவன் மீது  விசுவாசம்  இல்லாதவனாகினும் பிறர்மீது அன்புடன் வாழ்பவன் இறைவனடிசேரலாம். 
  சாத்தன்கள் கூட இறைவனை விசுவாசிக்கும், அஞ்சும் ஆனால் 
அவைகளிடம் அன்பிருக்காது.

  *பலச்சபைகள் தோன்றகாரணம் ?
  *கத்தோலிக்க திருச்சபையில் சிலைவழிபாடு ஏன் ?
  *போதகர்கள் ஏன் துறவியாகவேண்டும் என்கிறது திருச்சபை?                                                                                                                                  தொடரும்...

மலையாளத்தில் ஒரு பிளாக் காமெடி

(പത്മശ്രീ ഭരത് ഡോക്ടർ സരോജ് കുമാർ)

மலையாளத்தில் இந்த வருடம் வெளிவந்துள்ள பத்மஸ்ரீ
பாரத் Dr .சரோஜி குமார் திரைப்படம் சினிமாவில் உள்ள ஹிரோயிசத்தை மையமாகக்கொண்டு திரைக்கதை அமைக்கபட்டுள்ளப்படம்.

படம் திரைக்கு வருவதற்க்கு முன்பே மலையாள
முன்னனிநடிகரான மோகன்லலுடன் படத்தினியக்குனரும் நடிகருமான  ஸ்ரீனிவாசன்  மீடியாக்கள் மூலம் மோதிக்கொண்டார்.

படத்தில் உள்ள சிலக்காட்சிகள் மோகன்லாலுடன்  பொருந்தினாலும் படம் முழுவதுமாக பார்க்கும்போது தமிழ்சினிமாவின் இன்றய நிலையையே காட்டுகிறது.

மலையாள திரைப்படங்களில் நடிகர்களாலும்; இயக்குனர்களும் தமிழர்களை  அவமதிப்பது இது புதிதல்ல, என்றாலும் இதில் உள்ள உண்மைகளையும் மறுப்பதற்கில்லை .

படம் வெளியாகிய அன்றையதினமே வெற்றிவிழா கொண்டாடுவது,
படத்தின் கதையை மாற்றியமைப்பது, லாஜிக் இல்லாத மிகைபடுத்தும்  காட்சியமைப்பு, விளம்பரத்துறையில் ஆதிக்கம் போன்றவை தமிழ்சினிமாவில் அதிகரித்துவிட்டன.
பத்மஸ்ரீ பாரத் Dr .சரோஜி குமார் திரைப்படத்தின் முதல்பாகமான 
உடயனணு தரம்  தமிழில் வெள்ளித்திரை என்றபெயரில் ரீமேக்  செய்யப்பட்டு 
2008 ஆண்டு வெளிவந்தது.

இந்த படத்திலும் நடிகர்களின் ஹிரோயிசத்தை சுட்டிக்காட்டியிருப்பர்கள்.
ஆனால் இப்போது ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எந்த பெரிய நடிகர் நடித்த படமானாலும் மக்கள் மனதை கவரும் படங்களே நிலையான வெற்றியை பெறுகின்றன.

மலையாலத்திரையுலகம் தன்பாரம்பெரிய கதைகளை  விட்டு விட்டு முழுக்க
கமொர்சியல் பக்கம் திரும்புவதால்; தமிழில் வெளியாகும் நல்ல கதைகள் அந்த மண்ணிலும் பெரிய வெற்றி கண்டுவருகின்றன. இதன் விளைவாகவே சிலர் தமிழ்நாட்டை தங்கள் படங்களில் அவமதித்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில் சிறந்த நடிகர்களும் இயக்குனர்களும் உருவாகிவருவதால் தமிழ்சினிமா விரைவில் உலகளவில் சிறந்த இடத்தை அடையும் என்பதில்
சந்தேகம்  இல்லை. ஆனால் அதற்க்கு ரசிகர்களும் துணைநிற்க வேண்டும்.

விளம்பரங்களை நம்பாமல் சிறந்த திரைப்படங்களை வெற்றி பெற செய்ய வேண்டும், பெரிய நட்சத்திரத்தின் படமானாலும் தகுதி இல்லாத படங்களை உண்மை விமர்சனங்களால் களையறுக்க வேண்டும்.

தமிழ்சினிமா உலகளவில் உயர்ந்து விளங்கட்டும் .


Tuesday, 24 July 2012

நான் ஈ ஒரு பார்வை


தமிழில்  ஒரு  உன்னதப்படைப்பு  நான் ஈ 

லாஜிக் தேவையில்லாத  ஒரு கதையை லாஜிக்குடன்  தந்துள்ள
இயக்குனர் s .s  ராஜமௌலி  
பாராட்டுக்குரியவர் .

கதாநாயகன் இறந்தவுடன் கதறியழும்  சினிமாலாஜிக்கை  உடைத்து யதார்த்தமான வாழ்க்கையை பதிவாக்கியுள்ளார் ராஜமௌலி. கதைக்கு தேவையில்லாத  
பாடல்களையும் காட்சிகளையும் தவிர்த்து திரைக்கதையின்  வேகத்தைக்கூட்டியுள்ளார்.  திரைக்கதையின் ஒவ்வொருக்காட்சியும்
படத்திற்க்கு பலம் சேர்க்கின்றன...

குடும்பத்துடன் பார்க்கும்வகையில் தரமானக்காட்சியமைப்பு.  எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல் ஈ;  ஈ -யாகவே செயல்படுகிறது. ஈ -க்கு கதாநாயகியின் மைக்ரோஆர்ட் படிப்பை சக்தியக்க  மாற்றிய லாஜிக் அருமை. 

சுதிப்-ன் நடிப்பு படத்திற்க்கு மாற்றொரு பலமாக அமைந்துள்ளது. அனிமெசனில் உருவாகும் ஈயை மனதில்க்கொண்டு அவ்ர்க்கொடுத்துள்ள முகபாவனைகள் அவரை சிறந்த நடிகனாக முன்னிறுத்துகிறது .

மரகதமணியின் இசையில் பாடல்கள் மனதில்பதியும் படி உள்ளன, பின்னனியிசையிலும்  மரகதமணியின் பணி சிறப்பாக உள்ளது.
கிராபிக்ஸ் படத்துடன் பிரிக்கமுடியாத வகையில் 
கலந்துக்காணப்படுகிறது.  

சமந்தா-நானி காதல் மனதை தொடுகிறது, படம் முழுவதும் சமந்தா அழகுப்பதுமையாகவே வருகிறார்.

ராஜமௌலி தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் வெற்றி கண்டுள்ளார்.